கைக்கு எட்டியது வாய்க்கெட்டவில்லையே
மாமரத்துக் கீழே ஒரு அணில்
ஓயாமல் கத்திக்கொண்டிருந்தது
பெரும்பசியில் இருந்த பூனை ஒன்று
அங்கு வந்து சேர்ந்தது அணிலைக்
எட்டிப் பிடித்தது முன்காலால் பின்
வாய்க்கு எடுத்து செல்ல பார்க்கையில்
எப்படியோ தப்பிக் கொண்டு அணில்
எம்பிகுதித்து மாமரக் கிளையில் ஏறி
ஒளிய பார்க்கையில்.... பாவம் இதற்காகவே
தெருவோரத்தில் காத்திருந்த குறவன்
தன் கவண்கொண்டு அணில் மீது
கல் எய்திட அடிபட்டு கீழே விழுந்தது
அணில்.... குறவன் அதை அள்ளி
தன் பையில் போட்டுக்கொள்ள.... பார்த்துக்கொண்டிருந்த
பூனை நொந்துபோய்.... 'மியாவ்' என்று
கத்திக்கொண்டே மெல்ல நகர்ந்தது
பாவம் கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை
அதற்கு.....
வாழ்க்கையிலும் சிலருக்கு இப்படித்தான்
கைக்கு எட்டியது கிடைக்காது போதல்
யாரோ ஒருவனுக்கு அதுவே எளிதாக கிடைப்பதும்