இழப்பு

வழக்கை சந்திக்காத நீதிமன்றம் உண்டோ
இழப்பை சந்திக்காத மனிதன் உண்டோ
வரவும் செலவும் கலந்ததுதான் வாழ்க்கை
இன்பத்தை சுவைக்கும்போது ஆலயம் செல்லாதவன்
துன்பத்தை சகிக்காமல் கடவுளை தேடுகிறான்
நிறைவாழ்வை சுகித்திட நீதியுடன் இரு
மனஅமைதியே வாழ்க்கையின் கற்பகத்தரு
எதிரி என தெரிந்தும் எதிர் கூட்டத்தில் கர்ணன்
செஞ்சோற்று கடன் தீர்த்தான் நம்பிக்கை துரோகமின்றி
நம்மை படைத்த கடவுளை வஞ்சிக்க நினைத்தால்
வருவதென்னவோ ஈடில்லா இழப்புதான்
இழப்பையும் ஏற்க பழகியால்
மலரும் நல் வாழ்வுதான்
இழப்பு என எதுவுமில்லை ஏனைனில்
எதையும் நீ கொண்டுவர வில்லை
பூமி எனும் வாடகை வீட்டில் சில நாள் தங்கும்
விருந்தாளிகளாய் மட்டுமே நாம்
சக மனிதரை அன்பித்திருப்போம்
வாழும் நாளில் நன்றி கூர்ந்திடுவோம்
நிரந்தரமல்ல
வாழ்வு மட்டுமல்ல
இழப்பும் தான்...

எழுதியவர் : (25-Jun-20, 10:56 pm)
சேர்த்தது : vincy
Tanglish : ezhappu
பார்வை : 71

மேலே