புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 9---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௯
81. இன்று நீ போராடிப் பெற வேண்டிய நீதியை
நாளை போரிட்டுப் பெற நேரிடும்.
82. உன் நம்பிக்கையை இழக்கும் போதே
ஒவ்வொன்றாய் இழக்கத் தொடங்குகிறாய்.
83. வீரன் எப்போதும் முதுகில் குத்த மாட்டான்.
84. தன்மேல் நம்பிக்கை இல்லாதவன்
மற்றவரை நம்பி பயனில்லை.
85. தனி ஒருவனாய் நின்றாலும் தன்னம்பிக்கையோடு இரு
அதுதான் உனக்குப் பலம்.
86. நம்பிக்கை எங்கே வைக்கிறாயோ?... அங்கேயே தான் ஏமாற்றமும் இருக்கிறது.
87. வாழச் சொல்லிக் கொடுப்பதை விட
வாழ்ந்து சொல்லிக் கொடு.
88. நாளை சரியான பாதையில் நடப்பதற்கு
இன்றே நீ விழித்துக் கொள்.
89. உண்மையாக உழைப்பவரை உயரத்தில் வை
அவர் தான் உனக்காகவும் உழைப்பார்.
90. உன் புத்திசாலி தனத்தைச் செயலில் காட்டு
உன்னைப் புத்திசாலி என்று நினைத்துச் செயல்படாதே.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..