வாழவேண்டிய வயது எது 555
வாழ்க்கை...
அரேபிய மண்ணில் ஆறாவது
மாடியில் நின்று ரசித்தல்...
எல்லாம் அழகுதான்
கண்களுக்கு...
மனதுக்கு வேதனைகள்
மட்டுமே...
என் வீட்டினரை
ஊரார்கள் கண்டால்...
உனக்கு என்ன வெளிநாட்டு
சம்பாத்தியம் என்கிறார்கள்...
யாருக்கு தெரியும்
அயல்நாட்டில்...
என்னை கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடமும்...
வேதனைகள்
தாங்குகிறேன் என்று...
சம்பாதிக்கும் வயது
இதுதான் என்றார்கள்...
வாழ வேண்டிய
வயதும் இதுதான்...
சொல்வதில்லை யாரும்...
உள்ளத்தில் இருக்கும்
கவலைகளை...
வீட்டினர்கள்கூட
அறிவதில்லை...
போலியான புன்முறுவலுடன்
அயல் நாட்டில் எங்கள் வாழ்க்கை.....