பருவ ராகம்
காதல் சொல்லாத கண்கள்
புதுராகம் தராத சந்தம்
இந்த உலகில் ஏதடி
பதில் நீயும் கூறடி...
மடந்தை கண்கள் வீசும்காதல்
விடலைநீயும் அறியா கவிதையா?
நாணும் பெண்மை
பதிலும் கூற வேணுமா?
புதுகாதல் நின்றாடும் நம்கண்கள்!
பருவதீயில் தேகம் உருக
பருவராகம் நீயும் பாட
காமன்அம்பு நமையும் தாக்க
காதல் கடலில் குளிப்போம் வா வா..
இதழும்இதழும் தீண்ட தீண்ட
இதழின் தோன்றும் காயம் காயம்
இதழில் அமுதபானம் பருக பருக
இனிமைத்தேனாய் மாறும் ஆறும்
புதுகாதல் நின்றாடும் நம்கண்கள்!
அந்திவெயிலில் வானம் சிவக்க
மன்னன்நினைவில் இதயம் சிலிர்க்க
நீயும்வந்தாய் இன்பச்சாரல் தூவ
காதல்மழையில் நனைவோம் வா வா
கையும்கையும் உரச உரச
காளை மனது மயங்கும் மயங்கும்
கரங்கள் இணைந்து தழுவ தழுவ
காதல்பித்து பெருகும் இன்பம் கூடும்
புதுகாதல் நின்றாடும் நம்கண்கள்!