தெய்வத்துக்கு ஒரு கடிதம்

என் அப்பா தான் சிறந்தவர்
என எல்லோரும் சொல்லிக்கொண்டாலும்
உண்மையிலேயே என் அப்பா
மிகவும் சிறந்தவரே

கடின உழைப்புக்கு அஞ்சாத
சுரங்கத் தொழிலாளி
உடையிலும் நடையிலும்
நேர்மையிலும் புத்தி கூர்மையிலும்
இவர் முதலாளி

மென்மையான பேச்சு
துயரங்கள் கோடி இருந்தாலும்
கண்ணீரில் குளிக்காத
கண்களுக்கு சொந்தக்காரர்

என்னை ஒரு மகனாக அல்லாமல் நண்பனாகவே பாவித்தார்
நல்ல சினிமா பார்க்க
என்னை உடன் அழைத்துச் செல்வார்
ஆனாலும் அவர்மீது
எனக்கு ஒரு பயம் கலந்த மரியாதை
இருந்துக்கொண்டே இருந்தது

அப்பாவின் சட்டையை
அனிந்துக்கொள்ளும்
வயதுவரை அவரின் துயரத்தை
அனிந்துக்கொள்ள தவறிய
மூத்தப்பாவி நான்

ஒருநாள்
என்னைவிட்டுப் பிரிந்தார்
நான் ஆரிருளில் தள்ளப்பட்டேன்
இன்றும் நடுநிசியில் விழித்துக்கொள்கிறேன்
அப்பாவை நினைத்ததும்
என் கண்களில் மழைப்பெய்கிறது

இறைவனிடம் ஒரு வரம் வேண்டுகிறேன்
துன்பத்தில் பங்கு கொண்டு
இன்பத்துள் பங்குகொள்ளாத என்
தெய்வத் தந்தைக்கு
மகனாக பிறந்து அவரை
என் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க

இருக்கும்போது அவர்
அருமை தெரிவதில்லை
இழந்தப்பின் தான் புரிகிறது
அவரின் அருமையும் பெருமையும்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (1-Jul-20, 10:14 am)
பார்வை : 3384

மேலே