உலகைப் புதிதாக்க வாரீர்

நச்சுப் பொருட்கொட்டி நாட்டின் நதிநீரை
அச்சப் படச்செய்யும் ஆலைகள் – மிச்சமின்றிக்
கொன்றழிக்கப் போராடும் கொள்கைகள் மேலோங்க
ஒன்றுமற்ற தாகும் உலகு.
**
ஏற்கனவே நாட்டுக்குள் எங்கும் மணலகழ்ந்து
காற்றுள்ளோர் தூற்றிக் களிப்படைந்து – நாற்றமுற
விட்ட நதிக்குள் விசக்கழிவைச் சேர்த்தெடுத்துக்
கொட்ட வரும்நோய் கொடிது
**
மருந்தில்லா நோயால் மடிகின்ற நாட்டில்
அருந்துதற் கொவ்வாநீர் ஆக்கக் – கருதும்
நதிநீரைக் காப்பற்ற நாளை உலகைப்
புதிதாக்க வாரீர் புரிந்து
**
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jul-20, 1:37 am)
பார்வை : 62

மேலே