மலரே

மலரே

நீ போதி மரத்தடியில்
அமர்ந்தாய்
புத்தர் காதல் கவிதை
எழுதினார்..

நீ கருவிகள் இல்லாது
உன் கரு விழியால்
என் இதயத்தை
அறுவை
சிகிச்சை செய்யாது
அழகு சிகிச்சை
செய்து
எடுத்தவள்

உன் கலலையான
முகத்திற்கு கலைமாமணி
கொடுக்காது

நீ பேசும் தமிழுக்கு தமிழுக்கு
தமிழ்மாமணி விருது கொடுக்காது

யாரோ எழுதிய புத்தகத்திற்கு
தமிழ்மாமணி யும் கலைமாமணி யும்
கொடுக்கிறது அரசு

நீ மதிப்பெண்
உன் பின்னால் சுற்றியே
குறைந்தது என் மதிப்பெண்
ஏறெடுத்துப் பார்த்து
என்னையும் கொஞ்சம் மதி பெண்

நீ கிளின்டன் வீட்டில்
வளராது கிளியோ பாட்ரா
வீட்டில் வளர்ந்த கிளி

உன்னால் பலபேர்
உண்கின்றனர் கலி

அதில் தப்பி உன்னை
கட்டிய ஒருவன் மட்டும்
கரைக்கின்றன் உனக்காக புளி

எழுதியவர் : குமார் (3-Jul-20, 11:45 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : malare
பார்வை : 238

மேலே