விதி
ஏ மனிதனே!
நீதான் உயிர்களனைத்திலும் சிறந்தவனோ!
ஆறறிவு கொண்ட அற்புதப் பிறவியோ!
அனைத்தும் அறிந்த
அறிஞனோ!ஞானியோ!
உன் மதமொன்றே உலகத்தில் உயர்ந்ததோ!
உன் சாதியே
என்றும் பெருமைக்குரியதோ!
நீ படைத்த கடவுள் மட்டுமே உனக்கு அருளுமோ!
உனக்கு நீதான் உத்தமனோ!
உனையன்றி யாவரும் கொடியவரோ!
இவ்வுலகை ஆட்டிப் படைக்க நீ வந்தாய்
என்றெண்ணினாயோ!
மானுடம் வென்றதோ!
இப்பெருமையெனும்
சிறுமையனைத்தும்
உனையன்றி
ஓரணுவும் இம்மண்ணில் உணராது!
மூடனே!
இயற்கைக்கெதிராய் எழும் எவ்வுயிரும் வேரோடு பிடுங்கப்படுமென்ற உண்மை நிலை அறிந்தும்
முடிவின் விளிம்பில் இருந்தும்
உணராமல் ஆடுறாயோ!
என்ன செய்ய!
விதி வலியது!