என் அன்பு மகனுக்கு முதல் உதயநாள் 555

என் மகனே...


நித்தம் நித்தம் காலையில்
உதிக்கும் சூரியன்...

இன்று ஏனோ
இன்னும் தாமதமாய் உதயம்...

மண்ணில் நீ உதிக்கும்
நாள் என்பதால் தாமதமோ...

பூத்து குலுங்கும் ஜூலை
மலர்களை போல...

ஜூலை மலராய் எங்கள்
வாழ்வில்
நீயும் பூத்தாய்...

தாய்
தந்தையாக்கினாய் எங்களை...

தர்மங்களை காத்து
அநீதிகளை பிடுங்கி எரியும்...

புதிய உதயமாய் நீ
மண்ணில் வாழ்ந்துவிடு...

நந்தவன மலர்களை போல
என்றும்
வாழ்வில் புன்னகை பூத்திடு...

உனக்காக மட்டும்
வாழ்ந்துவிடாதே...

பொதுநலவுடன்
வாழ கற்றுக்கொள்...

உனக்கு நீயே
நீதிபதியாக
இருந்துவிடு...

உன் அன்பை தோற்கடிக்கும்
வேறுஅன்பு இவ்வுலகில் இருக்கக்கூடாது...

என் அன்பு மகனே.....






***முதல் உதயநாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பு மகனே ***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (4-Jul-20, 8:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 12228

மேலே