உயிரால் தமிழ் உயிரால் ஒரு காதல்

அன்பாய் ஒரு வருடல்...
ஆதரவாய் ஒரு தழுவல்....

இன்பமாய் ஒரு உரசல்....
ஈரமாய் ஒரு முத்தம்....

உரிமையாய் ஒரு ஊடல்-அந்த
ஊடலுக்குப்பின் ஒரு கூடல்...

எதிர்பாராத சில காதல் ....
ஏற்காத பல கானல்......

ஐயமாய் ஒரு தேடல்- காதலோடு

ஒற்றை விரல் பற்றி..
ஓராயிரம் தூரம் போதல்...

ஔடதமாய்..
என் மனக்காயத்தில்..
காதல் விரல் தீண்டல்....

இதுதான் உயிர் மெய்யுடன் சேரல்...

உயிரால் ஒரு காதல்....
தமிழ் உயிரால் ஒரு காதல்...!

எழுதியவர் : Renu (6-Jul-20, 7:43 am)
சேர்த்தது : renu
பார்வை : 100

மேலே