பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

புரிந்து பேசுவதில் தோழி, அறிவை புகுட்டும் ஆசான், அன்பு கொள்வதில் அன்னை! என்று பல முகங்களில் உலா வரும் ஆதிக்கு இன்று பிறந்தநாள்.
கவிதை எழுதலாம் என்று தான் பேனா எடுத்தேன் ஆனால் என்னவோ நம் நினைவுகள் தொற்றி கொண்டது, கவிதை வரவில்லை அன்புதான் வந்தது.
வாழ்க்கை வாழத்தான் என்றாலும் கடக்கும் பாதை என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்கிறது. உன்னை நான் அறியேன் உன் மனதையும் யான் அறிவேன்! இந்த வருடம் நீ பட்ட துன்பங்கள் சொல்ல வார்த்தை போதாது என்றாலும் வந்த இடிகளை எல்லாம் படிகளாய் மாற்றி வாழ்க்கையை அழகாய் மாற்றி கொண்டாய். இன்று போல் என்றும் வாழ இந்த தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

எழுதியவர் : மர்ஜுக் (6-Jul-20, 2:17 pm)
சேர்த்தது : சையது மர்ஜுக்
பார்வை : 104

மேலே