முகாம் இட்ட மை
கசியும் மை வருடலில் கவிதை தோன்றுமே
கசக்கிய தாளும் பயிற்சி அளிக்கு மே
எந்தை வித்தும் கொஞ்சம் சிந்தை பாயுமே
சத்தம் இருந்தும் சித்தம் ஒடுதே
எதுகை மோனை எட்டி பார்க்குமே
நெற்றி சுருக்கும் நித்தம் நிகழுமே
வார்த்தை தொடுக்க வானை நோக்கு மே
தானாய் விரல்கள் தாடி கோதுமே
பின்புற பேணாவில் பற்கள் பதியுமே
கவிதை பாடும் கவிஞர் ( பாடும் ) கவனம் ஈர்க்குமா