சொல்லித்தான் தெரிய வேண்டுமோ தாரமே உன் ஜாலங்கள்
என் உள்ளத்தரசியே உன்
பார்வையால் நீ காதல்
மொழி பேசுவாய் !
உன் வார்த்தையால் நீ
காதல் கவி மீட்டுவாய் !
உன் மௌனத்தால் நீ
தென்றலென என்னை
தீண்டுவாய் !
உன் வெட்கத்தால் நீ
ஒரு கவிஞன் என
எனை மாற்றுவாய் !
உன் புன்னகையால்
எனது இதயத்தில்
பூவின் வாசம்
வீசுவாய் !
என் தாரமே இன்னும்
சொல்லித்தான்
தெரிய வேண்டுமோ
உன் ஜாலங்கள் !