பிழை பிறப்பு

பிஞ்சு விரல்கள் என்றும் பாராமல்
மழலைகளின் மடியில்
காமம் தேடும் இழிபிறப்பே
உன்னை உன் தாய்
பெற்றெடுத்திருக்கவே
கூடாத ஒரு பிழை பிறப்பு நீ,
நினைவில் கொள்
" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன்மகனைச் சான்றோன்
என கேட்ட தாய். " என்றுரைத்தான்
வள்ளுவன், ஆனால் நீயோ
உன் தாய் ஈன்ற பொழுது
பெற்ற வலியை விட, தீராத
பெரும் வலியை தந்து
விட்டாய் உன் தாய்க்கு,
அய்யகோ எத்துணை வலி
கண்டிருக்குமோ அந்த பிஞ்சு உயிர்
உன்னை கொன்று புதைத்தால்
இந்த பூமி நஞ்சாகிவிடும்
உன்னை தீயிலிட்டால்
காற்றும் மசாகிவிடும்.
இறைவா இதுபோன்ற
ஈன படைப்பினை கருவாகும்
முன்னே கருக்கி கொன்றுவிடு
இனியாவது இல்லாமல்
போகட்டும் இது போன்ற
கொடும் மரணம், இனியாவது
அழகாய் மலரட்டும் எங்கள்
குழந்தைகளின் ஜனனம் .

எழுதியவர் : நிஜாம் (7-Jul-20, 2:59 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : pizhai pirappu
பார்வை : 65

மேலே