பழமையை போற்றுவோம்

ஏய்....! !
கொரோனாவே
எங்கள் கண்ணுக்கு தெரியாமல்
காற்றில் கலந்து
உலகம் மக்களை மிரட்டி
வகை தொகையின்றி
உயிர் பலி வாங்கி
எங்களை
வீட்டுக்குள்ளேயே
முடக்கி வைத்து
வேடிக்கை பார்க்கிறாய்...! !

உனக்கு முடிவு கட்ட
உலகமே முடிவு எடுத்து விட்டது...
உன் அழிவு விரைவில்...! ! !

ஆனால்...! !
ஓரு வகையில் உனக்கு
நன்றி சொல்ல வேண்டும்...! !

பழைய பஞ்சாங்கம் என்று
நிந்திக்க பட்டு, பரண் மேல்
தூக்கி எறியப்பட்ட
தாத்தா, பாட்டி காலத்து
பழக்க வழக்கங்கள்
மருத்துவ குணங்கள்
உயிர் பெற்று விட்டது...! !

ஒருவரை ஒருவர்
சந்திக்கும் போது
கைகூப்பி வணக்கம் தெரிவிக்க
உலகமே பழகிவிட்டது.

மஞ்சளின் மகிமையும்
மாட்டு சாணத்தின் பெருமையும்
இந்த இளைய சமுதாயம்
புரிந்து கொண்டுள்ளது.

மேலும், முக்கியமாக
வெளியே சென்று
வீட்டுக்கு வந்தால்
கை, கால், முகம் கழுவி
சுத்தமாக இருக்க வேண்டும்
என்ற பழக்க வழக்கம்
நடைமுறைக்கு வந்து விட்டது.

எனவே, "கொரோனாவே"
உன்னால், உலக மக்கள்
நன்றாக உணர்ந்து
கொண்டு விட்டார்கள்...! !
பழமையின் பெருமையை...
இனிமேல் உன்னை போன்ற
வைரஸ் தலை தூக்க முடியாது...! !

பழமையின் பெருமையை
பறைசாற்றுவோம் உலகுக்கு..! !
நோய் நொடியின்றி
வாழ்வோம் பல்லாண்டு..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Jul-20, 9:29 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 82

மேலே