ஆறாத ரணம் கண்ணீர் துளிகள் 555

என்னவளே...


கோடை மழையில்
குடையின்றி நனைந்தோம்...

நீயும் நானும்
கைகள்
நீட்டி சந்தோசமாக...

இன்று அடைமழையில்
குடை இருந்தும் நனைகிறது...

என் விழிகள் சிந்தும்
கண்ணீரில் என் இதயம்...

என் கண்ணீரை மறைக்கவே
சில நேரங்களில்...

தூறல் போடும்
மழைமேகம்...

இயற்க்கை எனக்கு கொடுத்த
வரம் மழைத்துளிகள்...

நீ எனக்கு கொடுத்த
ஆறாத ரணம் கண்ணீர் துளிகள்.....எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Jul-20, 4:42 pm)
பார்வை : 421

மேலே