என் உயிரில் கலந்த உறவு நீ 555

உயிரானவளே...
பூத்து குலுங்கும்
நந்தவனத்தில்...

ஒற்றை செங்காந்த மலராய்
உன்னை கண்டேன்...

உனக்கே தெரியாமல்

உன்னை தொடர்ந்தேன்...


தினம் தினம் உன்னை
காணும் ஒவ்வொரு நாளும்...

உனக்கே தெரியாமல் இன்பங்களை
எனக்கு அள்ளி கொடுப்பாய்...

மலர்களால் உனக்கு
வரைந்த
காதல் கடிதம்...

உன் புன்னகையால்
நனைந்தது கடிதம்...

பணமென்னும் பேய்
காதலில் குறுக்கிட...

செல்லரித்து போனது
நம் உயிர் காதல்...

அதிக இன்பங்களை எனக்கு
கொடுத்தவளும் நீதான்...

அளவில்லா துன்பங்களை எனக்கு
கொடுத்து சென்றவளும் நீதான்...

நீ என் உள்ளத்தில்
கலந்த உறவல்ல...

என் உயிரில்
கலந்த உறவு நீ...

மரணம் வரை தொடரும்

எனக்குள் உன் நினைவு.....எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Jul-20, 4:39 pm)
பார்வை : 745

மேலே