காதல் ஒப்பனை

என் கண் மையில் உன் காதல் கலந்திட்டாயா?
இட்டதும் இப்படி குளிர்விக்கிறதே!

நெற்றிப் பொட்டில் உன் முத்தம் கலந்திட்டாயா?
வைத்ததும் நாணம் ஆட்கொள்கிறதே!

கட்டும் சேலையில் உன் வாசம்
கலந்திட்டாயா?
திரவியமின்றி நாசி துளைக்கிறதே!

கை வளையலில் உன் எழுத்தை
பதித்திட்டாயா?
சத்தம் விடுத்து கவிதை சொல்கிறதே!

கால் கொலுசில் உன் கொஞ்சல்
கலந்திட்டாயா?
எட்டி வைக்கையில் உன் குரலாய் ஒலிக்கிறதே!

தலைமுடி வாறுகையில்
விரல்களால் மயிற்கால்கள் வருடியதும்..
கைக்கடிகாரம் அணிகையில்
உன் மார்பில் சாய்ந்து லப்டப் கேட்டதும்..
காலணி அணிகையில்
உன் பாதம் ஏறி எறும்பாய் நகர்ந்ததும்..
அடடா..!!
இப்படி
காதலால் எனைக் கட்டுகிறாயே..
எப்படி
எந்தன் வேலை செய்வேன்..

எழுதியவர் : துகள் (12-Jul-20, 7:44 pm)
Tanglish : kaadhal oppanai
பார்வை : 138

மேலே