தொலைத்த என்னையே தேடுகிறேன்
வாழும் காலம் வரை
ஓயாத கடல் அலையென
எப்பொழுதும் பொங்கி பெருகும்
என்று நான் எண்ணிய
நம் காதல்...
கல்லுக்குள் ஈரம் என
கசிந்து குறைவதன்
காரணம்
காலத்தின் கட்டாயமா ?
அல்லது நம்மில் வந்த
வாழ்வியலின் பருவநிலை
மாற்றமா ?
இதற்கான விடை பெறுமோ
தனிமையில் தவித்து
இரவில் உறங்காமல்
விழியோரம் வழிந்து
தலையணையில் உறைந்திடும் கண்ணீர் துளிகளில்
நான் தொலைத்த என்னையே மீண்டும் கண்டுக்கொள்ள
தொடர்ந்த
இந்த தேடல் பயணம்....