உரமாய் மாற்று........
எத்தனை காகிதம்
தற்கொலை
செய்த கொண்டனவோ
என் வீட்டு
குப்பைத் தொட்டியில்
என் காதலை
உன்னிடம்
தெரிவிக்கும் முயற்சியில்.
உன் நினைவு
தீயால்
பனியாய் உருகுகிறேன்
மேலும் ஒரு கணம்
உன்பிரிவு
நீடித்தால்
புறா ஒன்று போதுமானது
தூது அனுப்ப அல்ல
என்னை தூக்கி செல்ல.
கொலை செய்துகொண்டே
மருத்துவம் பார்க்கும்
யுக்தி எங்கிருந்து
கற்றாய்?
என் 'இசிஜி' அறிக்கையும்
உன் பெயரையே
கிறுக்கி இருப்பதை
பார்த்து மருத்துவ துறையும்
அதிசியக்கிறது
என் கிறுக்கல்களை
உன்
இதழ்களில்
அரங்கேற்றி
கவிதைகளாய் மாற்று
இல்லையேல்
குழியொன்று தோண்டி
என்னை பூமிக்கு
உரமாய் மாற்று.