புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 25---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௫

241. வண்டி மாடும் தொழிலாளியும் ஒன்று தான்
உழைப்புக் குறைந்தால் முதலாளியால் விரட்டப்படுவார்கள்.

242. மனிதர்கள் கூடி அழுகின்றனர் ஒரு பசுவின் மரணத்திற்கு
ஈக்கள் கூடி அழுகின்றன பிச்சைக்காரன் மாரணத்திற்கு.

243. உன் உழைப்பால் பலன் கிடைக்கும் வரைக்கும்
உன்னை ஒரு உயரத்தில் வைத்திருக்கும்
முதலாளியின் மனம்.

244. அடுத்தவர் படுகின்ற துன்பத்தை ஒருமுறை உணர்ந்து பார்
உனக்கு ஏற்பட்ட துன்பம் பெரிதாகவே இருக்காது.

245. உன் சோகங்களின் மீது பாதங்களை வைத்து முன்னேறிச் செல்
உன்னைச் சந்தோசம் கைநீட்டி அணைக்கக் காத்திருக்கும்.

246. நீ யாருக்காக அடுத்தவரிடம் சண்டை போடுகிறாயோ?.
அவர்கள் இருவரும் உனக்கு முன்னால் சேர்ந்து கொள்வதும்
நடக்கத்தான் செய்கிறது.

247. அறிமுகம் இல்லாதவரிடம் நீ காட்டுகின்ற அன்பு
உன் அடையாளமாய் பரிணாமம் எடுக்கும்.

248. அன்பை அடுத்தவருக்கும் கொடுத்துப் பழகு
அது உன் மனதையும் சேர்த்தே சுத்தம் செய்யும்.

249. நீ அடைகின்ற அவமானங்கள்
உனக்கான அங்கீகாரத்தைத் தேடச் சொல்கிறது.

250. வெற்றியும் தோல்வியும் நீ வாங்கும் அணிகலன்கள்
அதைச் சுமந்து கொண்டே இருக்காதே கழற்றி வைத்துவிடு
அது உன்னைச் சரியாகச் செயல்பட விடாது.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (15-Jul-20, 9:29 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 76

மேலே