கோவிட் 19
உயிர் கொல்லி கொரோனா
உன்னால் மக்கள் தவிக்குதே வீனா
வேலை வெட்டி இல்லையே - ஒரு
வேளை சோறுகூட இல்லையே
பச்சிளங்குழந்தை பாலுக்காக அழுகுது
பால் வாங்க கூட பணமில்லையே
கொரோனாவே நீ வந்ததால்
கூலி வேலைக்கு போகமுடியலையே
படிச்சவனும் சாகிறான்
படிக்காத பாமரனும் சாகிறான்
எங்களை சாகடிக்க வந்த கொரானாவே - நீ
எப்போது சாகப்போகிறாய்
முகக்கவசம் போடவைத்தாய்
மூச்சு முட்டி திணற வைத்தாய்
கைகளை அடிக்கடி கழுவ விட்டு
கண்ணாமூச்சி ஆட வைத்தாய்
மனிதனின் கடைசி பயணத்தில் கூட
கைகளால் தொட மறுக்க வைத்தாய்
தொட்டால் தொற்றி கொள்வாய்
தொடாமலே எட்டி நில் என்பாய் .
அன்புடன்
ராமன் மகேந்திரன்