காதலடி நீ எனக்கு

நீ பெயரெழுதி பார்த்து
திருப்பி கொடுத்த பேனாவை
பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்
பணப்பெட்டியில்...

இதுபோல...

உன்...
உடைந்த சில வளையல்களும்,
நெளிந்த கொலுசும்,
கிழிந்த ஆடைகளும்,
நீ வெட்டிப்போட்ட நக துணுக்கும்,
இன்னும்... சில...
நீ உபயோகித்துத் தூரபோட்ட
அழகு சாதனங்களும்
அடங்குமதில்.!!

முகம் பார்த்தே - உன்
அகம் சொல்ல முடியுமென்னால்.!!
நீ..மறைத்துச் சொல்லும்
பொய்கள் எதையும்
காட்டிக் கொடுத்துவிடும்
உன் கண்கள்.!!

தெரியும் எனக்கென்பது
தெரிந்தும்...

நீ வேண்டுமென்றே சொல்லும்
சிறு பொய்களில்...
குறும்பாய் சுழிக்கும் உன்
இதழ் வளைவில்...
சிக்கி கொள்ளும் விழிகளை
வலிக்காமல் எடுத்துவிடு.!!

இன்று நீ
என்ன உடை அணிந்து வருவாயென,
நேற்றிரவிருந்தே
யோசித்து அலையும்
இந்த மானம் கெட்ட மனதை...
நீ திரும்பிப்போகையில்...
உன்னுடனே கூட்டிச் சென்றுவிடு.!
தாங்கவில்லை
இதன் தொல்லை.!


///---///---///---
மருத கருப்பு.

எழுதியவர் : மருத கருப்பு (15-Jul-20, 3:13 pm)
பார்வை : 258

மேலே