உணர்வோடு உணர்வாக

என்னை ஈன்ற தாயே உன் மடி
தவழ்கயிலே அன்பை உணர்ந்தேன்
என் தந்தையின் மார்பினிலே
வாழ்வின் தடம் உணர்ந்தேன்
என் பிறப்புகளோடு கூடி
திரிகையில் பாசம் உணர்ந்தேன்
என் நட்பின் அரவணைப்பில்
பற்றுதல் உணர்ந்தேன்
துணைவி உன்னை சேர்ந்த பின்னே
வழித்துணை உணர்ந்தேன்
என் தாய் மண் உன்னை தீண்டயிலே
என் உரிமை உணர்ந்தேன்
என் அன்னை தமிழே உன்னை
மொழிகையிலே தீஞ்சுவை உணர்ந்தேன்
என்னை வடித்த இறைவா உன்னை
தொழுகையிலே ஈருலகம் உணர்ந்தேன்
இத்துணை உணர்வுகள் கிடைக்கபெற்றதாலே
உணர்வுகள் இன்றி உயிரும் இல்லை
உயர்வுமில்லை என நான் உணர்ந்தேன்.

எழுதியவர் : நிஜாம் (15-Jul-20, 3:17 pm)
சேர்த்தது : நிஜாம்
பார்வை : 193

மேலே