நான் …… நானா

இந்நோயுக்கு மருந்துண்டோ இஞ்ஞாலத்து மாந்தர்களே
யாம் செய்யா செயலுக்காக எந்நாளும் வசவுகள் தான்
உடன் பிறந்தோர் விலக்கி வைக்க ஊரார்கள் கேலி பேச
பருவத்தின் போதில்தான் பற்பல எண்ணவோட்டம்
கூந்தல் மேல் ஆசைக்கொண்டேன் குலப்பெண்ணாய் எண்ணிக்கொண்டேன்
கம்பீர நடையை இழந்தேன் கல கலவென வளையல் அணிந்தேன்
சட்டையையும் வேட்டியும் மறந்து தாவணி மேல் மோகங்கொண்டேன்
ஆடவரை நோக்கும் போது ஆட்கொள்ளும் வெட்கம் உணர்ந்தேன்
கொம்பு மஞ்சள் பூசிக் குளிக்க குதுகளிக்கும் உள்ளம் கண்டேன்
தோட்டத்து வாச மலர்மேல் வாஞ்சையாய் ஆசைக் கொண்டேன்
வாலிபத்து ஆணாய் எண்ணி வம்பிட்டனர் குடும்ப குழுவினர்
பின்னத்தின் நிலையையொத்த பிடிப்பில்லா நிலையில் உள்ளேன்.
------ நன்னாடன்.