முகநூல் பதிவு 30

மொத்த உலகையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது கொரோனா.....
நின்றுபோன பயணங்கள் எத்தனை...?
நின்றுபோன பணிகள் எத்தனை...?
நின்றுபோன திருமணங்கள் எத்தனை...?
நின்றுபோன சுபநிகழ்வுகள் எத்தனை...?
நின்றுபோன புதிய முயற்சிகள் எத்தனை...?
நின்றுபோன தொடர்புகள் எத்தனை...?
நின்றுபோன உதவிகள் எத்தனை...?
இப்படி நின்றுபோனதில் என் புத்தக வெளியீடும் ஒன்று...
அதனால் பெரிதாய் ஒன்றும் வருத்தம் இல்லை.... விழாவின் மூலம் பல நல்ல நட்புக்களை சந்திக்கும் ஆர்வத்தில் இருந்தேன்.... அது இயலாமல் போனதில் மட்டுமே வருத்தம்....
ஆறு படைப்புகளின் வெளியீடு(5 கவிதை தொகுப்பு, 1 கட்டுரை தொகுப்பு)....
புத்தகம் அச்சாகிவிட்டது.... அழைப்பிதழும் தயாராகிவிட்டது....
நல்லவேளை , அழைப்பிதழ் ப்ரூஃப் வந்தநாளே ஊரடங்கும் அறிவிப்பானது... எல்லாவற்றையும் அப்படியே நிறுத்தி வைத்தேன்.... ஓரிரு மாதத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பினேன்....
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது....
ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் தொடர்ந்து எழுதுகிறேன்.... இன்னும் மூன்று புத்தகங்களுக்கு தேவையான படைப்புகள் தயார்.....
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்” என்ற கீதையின் வாக்கில் அசைக்க முடியா நம்பிக்கை உடையவள் நான்...அவன் (ஆண்டவன்) நினைத்தால் எதுவும் நடக்கும்....
இறையருளுடனும் உங்கள் பேரன்புடனும்
மொத்தமாக ஒன்பது படைப்புகளையும் சேர்ந்து வெளியிடுவேன் என்று நம்புகிறேன் .....
கொரோனா கொட்டம் ஒழியட்டும்....
உலகம் முழுதும் மீண்டெழட்டும்!

என் படைப்புகள் ....
(1) நினைவுச் சாரல்கள்
(2)பெண்ணியப்பேரிகை
(3)அகரம் அலகு அலசல்
(4)றெக்க முளைச்ச மனசு
(5)விடியலின் பாதையில்
(6)அழகின் ஆலிங்கனம்
ஆறு படைப்புகளுக்கும் முறையே அணிந்துரை வழங்கி எனக்கு பெருமை சேர்த்த சகோதரி திருமதி .ஆண்டாள் பிரியதர்சினி ,
மதிப்பிற்குரிய சகோதரர் வைகோ அவர்கள்,
சகோதரர் ஆ.வந்தியத்தேவன்,
நண்பர் நல்லு.இரா.லிங்கம்,
சகோதரர் முனைவர்.தமிழ்மணவாளன்,
சகோதரர் கவிஞர்.மணிவேந்தன் ஆகியோருக்கும்
வாழ்த்துரை வழங்கிய மதிப்பிற்குரிய பட்டுக்கோட்டை பிரபாகர் சார் மற்றும் கவிஞர் வை. இராமதாஸ் காந்தி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....
எத்தனையோ அலுவல்களில் ஓய்வில்லாமல் இருந்தபோதும் விழாவிற்கு தலைமை ஏற்று புத்தகங்களை வெளியிட அன்புடன் சம்மதித்த
சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும்...
அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று ஏற்பாடு செய்த என் சகோதரி பூங்கோதை ஆலடி அருணா அவர்களுக்கும் ....
இரண்டுமுறை தேதி மாற்றியும் மனம் கோணாமல் வாழ்த்துரை வழங்க சம்மதித்த
சகோதரி ஆண்டாள் பிரியதர்சினி மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்களுக்கும்
புத்தகத்தை அழகாய் வடிவமைத்து அச்சடித்து வெளியிட உதவிய அன்புச் சகோதரர் வானதி இராமநாதன் ஐயா அவர்களுக்கும்
மீண்டும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .....

படைப்புகளும், பழைய அழைப்பிதழும் உங்கள் பார்வைக்கு...

எழுதியவர் : வை.அமுதா (16-Jul-20, 5:07 pm)
பார்வை : 44

மேலே