பல்லாங்குழி ஆடலாமா

பல்லாங்குழி ஆடலாமா.....?

பாவையர்கள் ஆடும் பாரம்பரிய விளையாட்டு
பல்லாங்குழி என்பது இதற்குப் பேரு
இல்லத்தில் முடங்கிய அக்கால பெண்களுக்கு
இதுவே சிறந்த அறிவுசார் பொழுது போக்கு

ஆடுகளத்திற்கு எதிரெதிராய் இருவரே போதும்
ஆடத் தொடங்கியப்பின் ஆர்வம் கூடும்
இருபுறம் ஏழு வார்த்தக் குழிகள்
குழிக்கு ஐந்து கையளவு மணிகள்

ஆட்டக்காரர்களுக்கு எண்ணிக்கை திறன் மூலதனம்
ஏழுக்குழி மணிகள் கொண்டே கணக்கிடல் சூட்சமம்
இடமிருந்து வலமாக மணிகள் இடப்படும்
மணிகளற்ற குழிகள் சொத்தையென அடைக்கப்படும்

பசுப்பாண்டி கட்டுப்பாண்டி காசிப்பாண்டி
சரிப்பாண்டி எதிர்ப்பாண்டி சீதாப்பாண்டி
இராஜப்பாண்டியென இதில் எழுவகை உண்டு
ஆட்டமுடிவில் அதிகமணி பெற்றவர்க்கே வெற்றிச் செண்டு

எண்ணியல் கணிதம் இணைந்தே வளரும்
இருகர விரல்கள் பயிற்சியில் திரளும்
ஒருமுக கவனம் மென்மேலும் குவியும்
இனிதே காலம் பயனுடன் கழியும்

வீட்டில் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம்
விளையாட்டுடன் கணிதத்தை கற்றுத் தருவோம்
கணினி கைப்பேசியிலிருந்து சற்றே விடுபட்டு
குடும்பத்துடன் கூடி ஆடி மகிழ்ச்சியை மீட்டெடுப்போம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (16-Jul-20, 5:09 pm)
பார்வை : 39

மேலே