என்னருகில் நீ இருக்க வேண்டும் 555

என் அன்பே...எனக்கு உறவென சொல்லிக்கொள்ள
பலர் இருந்தாலும்...

என் உயிரென நான் சொல்ல
நீ வேண்டும் என் வாழ்வில்...

பேசும் விழிகளை
நீ
வைத்துக்கொண்டு...

பேசாத என் விழிகளில் ஏன்
கண்ணீரை வரவைக்கிறாய்...

கலங்கும் என் விழிகளை
ரசிக்க
உனக்கு ஆசையெனில்...

என் கண்ணீரை
துடைக்க...

என்னருகில் நீ
இருக்க வேண்டும்...

உன் விரல்பிடித்து நான்
வளம்வர
வேண்டும் மணவறையை...

நாளை என் விரல் பிடித்து
நடைபோட வேண்டும் நம் மழலை...

உன் கண் அசைவில்
காதலை
சொல்லடி கண்ணே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (16-Jul-20, 4:44 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 719

மேலே