குறுங்கவிதை

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

*குறுங்கவிதை*

படைப்பு; *கவிதை ரசிகன்*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

கொசு கடிக்கிறது

இரத்தம் கிடைக்கவில்லை

ஏழை உடல்

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

புகை பிடிப்பது தவறு

தந்தை மகனிடம் சொல்கிறார்

புகை பிடித்தப்படி

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

சிந்திய சர்க்கரையை

பொறுப்புடன் பொறுக்கிறது

எறும்பு

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

பொருள்கள் உடையாமல்

மனம் உடைந்து

குழந்தை இல்லாத வீடு

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

மரம் வெட்டும்போதெல்லாம்

மரவெட்டிக்கு வலிக்கிறது

மனம்



*கவிதை ரசிகன்*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Jul-20, 8:41 pm)
Tanglish : kurunkavithai
பார்வை : 61

மேலே