கண்டதும் காதல்🌹

கண்டதும் காதல்🌹

கண்டதும் காதல்
இது தானா
ஒரே பார்வையில் விழுங்கிவிட்டாள்.
காதல் எதிர்ப்பாளன்
நான்
அவன் கண்ண
குழியில் விழுத்துவிட்டேன்
வியாக்கியானம் பேசிய நான் கவிதை எழுத தொடங்கி விட்டேன்
வினோதம் தோற்றி கொள்ள
வித்தியாசம் ஆகிவிட்டேன்.
கண்ணாடி முன் அடிக்கடி தலைவாரி அழகு பார்த்தேன்.
இரவில் பல மணி நேரம் மொட்டை மாடியில் செலவழித்தேன்.
முழு நிலவே!
நீ சொல்
என்ன செய்தாள்
என்ன மாயம் செய்தாள்
அவளை நினைக்காமல் என் நினைவு இல்லையே
நட்சத்திர குவியலே
நீங்கள் சொல்லுங்கள்
எப்படி அவளுக்கு அடிமை ஆனேன்.
வெண் மேக கூட்டமே
நீங்கள் கூறும்
எது என்னை அவளிடம்
கடத்தியது
தென்றலே நீ சொல்
எவ்வாறு நான் அவளிடம் ஐக்கியம் ஆனேன்.
வண்ண மலரே அவளிடம் மயங்கியது
எப்படி.
விடை உங்களுக்கும் தெரியவில்லையா
சில கேள்விகளுக்கு விடை கிடைக்காது.
கண்டதும் காதலும்
அந்த வகை உணர்வா.
எப்படியோ
சந்தோஷ வானில் என் காதல் பட்டம் சிறகடித்து பறக்கிறது.
உள்ளத்தில் எப்போதும்
உற்சாகம் துள்ளுகிறது.
மனதில் ஆயிரம் மத்தாப்பூ எப்போதும் பூக்கின்றது.
நெஞ்சில் அவள் நினைவுகளை ஏந்தி
இதயத்தில் எப்போதும் அவள் முகத்தை பூட்டி பாதுகாத்து வருகிறேன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (16-Jul-20, 7:50 pm)
பார்வை : 289

மேலே