புன்னகை

காட்டுப் பூவின் சிரிப்பி னிலே
காணும் பொருளே வேறுவேறே,
வீட்டுப் பெண்ணின் தலையதிலோ
விதியே முடிந்த பிணத்தினிலோ,
போட்டுக் கழற்றும் சிலையினிலோ
போவ தெங்கோ தெரியவில்லை,
காட்டும் மாறாப் புன்னகையே
கற்பாய் மனிதா பூவிடமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Jul-20, 6:26 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : punnakai
பார்வை : 148

மேலே