நன்னெறியில் ஒன்றே
நன்னெறியில் ஒன்றே !
**********************************
கன்னியவளைக் கண்டு
கண்கள் படபடத்தது !
நாணலவளைப் பார்த்து
நரம்புகள் துடிதுடித்தது !
நடையழகைக் கண்டேன்
நடையும் தளர்ந்தது !
உடையழகைக் கண்டேன்
உவகையும் பெருகியது !
குரலினைக் கேட்டதும்
குயிலாக உணர்ந்தேன் !
குறுநகைப் பூத்ததும்
குதூகலம் அடைந்தேன் !
நெருங்கி வந்ததால்
நெளிந்து வழிந்தேன்
சிலையாய் நின்றதால்
சிற்பிபோல ரசித்தேன் !
சிங்காரி அவளழகால்
சிந்தையும் சிதறியது
சிருங்காரம் கூடியதால்
சிறுமதியும் மயங்கியது !
வாய்மட்டும் திறந்தது
வார்த்தைகள் வரவில்லை
வண்ணமயில் அழகால்
வரிகளும் பிறக்கவில்லை !
காதலில் விழுந்தேனா
விளங்காது விழித்தேன் !
காரிகையின் எண்ணம்
புரியாது திகைத்தேன் !
இருபாலின ஈர்ப்பு
இயற்கையின் கூற்று !
இருமனம் இணைவது
இவ்வுலகின் நிகழ்வு !
தவறில்லை தரணியில்
தயங்காது கூறிடுவேன்
நட்பாக தொடர்வதும்
நன்னெறியில் ஒன்றே !
பழனி குமார்