மோக முள்🔥

மோக முள்🔥

என் அருமை சமுதாயமே
உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்
இளம் விதவை நான்.
இளமை மாறா பருவம் எனது.
இனிமை நிறைந்த கனவுகளுடன் ஆரம்பித்து என் வாழ்க்கை தீடிர் பாலைவனமானது
சோலைவனம் போல் என் வாழ்வு அமையும் என்ற கனவு கானல் நீர் ஆகிவிட்டது.
தொலைத்துவிட்ட வாழ்க்கையை என்னி
தினம் கண்ணீர் விடும் என் கண்கள்.
மனம் ரணமாகி போக
இதயம் புண்ணாக வலிக்கிறது.

கைபுண்ணுக்கு மருந்து உண்டு
என் மனகாயத்துக்கு மருந்து யார் தருவார்.

காலம் வெகு விரைவாக
ஓடியது
மறதி ஒன்றே மானுட பிறவிக்கு ஆண்டவன் கொடுத்த அரும் பெறும் பொக்கிஷம்.

காலை என்பது மனித சங்கிலியால் பின்னப்பட்டது.
இரவு என்பது இன்பமானது ஜோடி புறாக்களுக்கு
என்னை மாதிரி இருப்பவர்களுக்கு இம்சை.
நான் ஒன்றும் ஜடம் இல்லையே
நான் ஒன்றும் கடைகளின் முகப்பில் வைக்கப்படும் அலங்கார உயிரற்ற பொம்மை இல்லையே
நானோ, உயிருள்ள ஆசைகள் நிரம்பிய, இளமை மாறா பெண்.
தூக்கம் வந்துவிட்டால் தப்பித்தேன்
இல்லை என்றால் இரவை கடப்பது பெரும் அவஸ்தை.
ஆண்,பெண் இருவரும் உடல் அமைப்பு தான் வேறு
ஆசை, உள்ளம், எண்ணம் எல்லாம் ஒன்று தான்.
வெட்கத்தை விட்டு சொல்கிறேன், அழுகிறேன்
என் இளமை என்னை திட்டுகிறது
காரணம் அதன் பசிக்கு நான் சோறு போடாததால்.
இரவின் ஆரம்பம் எனக்கு தினம் வேதனை
உடல் ஆசையின் உச்சம் மோகம்
மோகம் எனும் தீயை நான் எதை கொண்டு அனைப்பது.

- பாலு..

எழுதியவர் : பாலு (17-Jul-20, 8:10 pm)
பார்வை : 78

மேலே