உண்மையும், பொய்யும்

உண்மையும், பொய்யும்.

உண்மை உறங்கும் போது பொய் பேய்யாட்டம் ஆடும்.
நல்லவர்களின் அமைதி, கெட்டவர்களுக்கு காலம் வகுக்கும்.
பொய் பளபளக்கும் விட்டல் பூச்சி.
உண்மை என்றும் நிரந்திர சூரியன்.
பொய் ஆடி காற்றில் பறந்து கூரையில் உட்காரும் குப்பை.
உண்மை படிப்படியாக உழைத்து கோபுரத்தில் அமரும் கும்பம்.
பொய் காட்டாற்று வெள்ளம் போல் தறிகெட்டு திசை அறியாமல் ஓடும்.
உண்மை தெளிந்த நீரோடை.
வற்றாத ஜீவ நதி.
பொய் அலங்காரம் நிறைந்த அஸ்திவாரம் இல்லாத வீடு.
உண்மை வானுயர்ந்து நிலைத்து நிற்கும் கோயில் ராஜகோபுரம்.
பொய் வண்ணம் அழகிய
காகிதப் பூ.
வாசம் இல்லாதது.
உண்மை வாசம் நிறைந்த
மல்லிகை பூ.
வாசம் நிறைந்தது.
பொய் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அரசியல் மேடை பேச்சு .
உண்மை திருகுறள் போல் ரத்தின சுருக்கமானது.
பொய் நீலிக்கண்ணீர் வடிக்கும்.
உண்மை ஆனந்த கண்ணீர் வடிக்கும்.
பொய் பாசாங்கு செய்யும்.
உண்மை நேரடியாக பேசும்.
பொய் உதட்டளவு சிரிக்கும்.
உண்மை மனதிலிருந்து சிரிக்கும்.
பொய் சாயம் வெளுக்க வெட்கி
கூனி குறுகிவிடும்.
ஒரு கட்டத்தில் அழிந்துவிடும்.
உண்மை அமைதி காக்கும்.
யாருக்கும் அடி பணியாது
நிமிர்ந்து நடக்கும்.
காலம் கடந்து நிலைத்து நிற்க்கும்.

-பாலு.

எழுதியவர் : (17-Jul-20, 11:17 pm)
சேர்த்தது : balu
பார்வை : 239

மேலே