திங்கள் அவள்🌹

திங்கள் அவள்🌹

திங்கள் அவளை கண்டேன் .
அவள் மீது அளவில்லா காதல் கொண்டேன் .
செவ்வாய் அதனை ரசித்தேன்.
கொவ்வை அதனை ருசிக்க துடித்தேன்.
புதன் மஹா திசையில்
பிறந்தவளோ!
அறிவுச்சுடராய் ஜொலிக்கிறாள்.
வியாழன் குரு பகவான்
சன்னதியில் சந்தித்தோம்.
வெள்ளி அவள், கள்ளி 
கண்களால் காதல் சொன்னாள்.
சனி இனி எனக்கில்லை, கனி அவளை காதலித்ததால். 
ஞாயிறு, மலர்தூவி எங்களை அன்புடன்  வரவேற்றது. 
      - பாலு.

எழுதியவர் : பாலு (18-Jul-20, 11:42 pm)
சேர்த்தது : balu
பார்வை : 196

மேலே