மகளே என் மகளே
மகளே...என் மகளே..!!
என்னுள் இருந்து...
எனக்கே பிறந்து...
பின்
என்னைப் பெற்றாய் தந்தையென.!!
மகளே...என் மகளே...!!
எம் ஈருடலின் ஓருயிர் நீ.!!
உன் பேரழகுச் சிரிப்பின்
பெரும் ரசிகன் நான்.!!
பல் முளைக்கும் முன்னரே
பல மொழிகள் பேசிடுவாய்.!!
அர்த்தம் இல்லையெனில் என்ன.?
ஆயிரம்கோடி பெருமெனக்கு.!!
கண்களை சுருக்கி நீ
சிரித்திடும் போதெல்லாம்...
காரியம் மறந்திடும் எனக்கு.!!
அதில்...
மேனி சிலிர்த்து
மெலிதாய் பளபளக்கும்
ஈரத்தில் விழிகள் இரண்டும்.!!
மகளே...என் மகளே..!!
அப்பழுகில்லா உன் புன்னகை...
அரிதிலும் அரிதுதான் எனக்கு.!!
அப்பா' என நீ அழைக்கும்
ஒவ்வொரு முறையும்
மண்ணில் பிறக்கின்றேன்
மறுபடியும் நான்.!!
எந்தன் உயிர் ஈன்றெடுத்த
உயிரின் உயிர் நீ.!!
உந்தன் கண்ணில் நீர் பாரின்
எந்தன் மாரில் வலி ஏறும்.!!
மகளே...என் மகளே..!!
அப்பா என நீ அழைக்கையில்
இன்னும் இன்னும்
அழகாகிப் போகிறது
என் தமிழ்.!!