இராவணன் முதல் திராவிடர் வரை
இராவணன் முதல் திராவிடர் வரை
இந்து மதம் , இந்து எனும் சந்திரனை அணிந்த பரம சிவனை வணங்கும் மதமாம்.
நமசிவய எனும் சைவ மதம். மண் (ந.,) :நீர் (ம) நெருப்பு (சி )காற்று (வ )ஆகாயம் (ய)
தெற்கே இலங்கை முதல் வடக்கே இமயம் இந்துகுஷ் காம்போஜம் கடாரம் வரை
எங்கும் இந்து எனும் சைவ மதம் பரவியிருந்தது..
உலகில் நாலுவகை யோனிகள் 1அண்டசம் 2.பையினம் 3.சுவதேசயினம் (வியர்வை)
4. விதைதினம் என்பதையும் உலகில் ஏழுவகை பிறப்புக்கள் :- மேமையான1.தேவர்கள்
2. மனிதர்கள் 3. மிருகங்கள் 4. ஊர்வன 5.பறப்பினங்கள் ,6. நீர்வாழ்வன 7.தாவரங்கள்
என ஏழு வகைகள் இருப்பதை உலக மக்களுக்கு கணக்கிட்டுச் சொன்னவர்கள பாரத
தேச சைவர்களான ரிஷி முனி சித்துக்கள்தான்
ராக்ஷஸ பிறப்பு என்பது உண்மையில் யாரும் பிறந்ததில்ல ராக்ஷஸ குணம் கொண்ட
மனிதர்களை மனிதர் என்று சொல்லக் கூடாது என்ற நினைப்பில்தான் இரண்யன்.,
இராவணன் போன்றவர்கள் ராக்ஷஸர்கள் என்றழைக்கப் பட்டார்கள். இதுதான்
உண்மை. இராவணன் தம்பி விபீஷணன் மட்டும் எப்படி மனிதனாக ஏற்றுக்
கொண்டார்கள். இரண்யனுக்குப் பிரகலாதன் மட்டும் எப்படி மனிதனாகப் பிறக்க
முடியும். அரக்கர் ராஜ்ஜியத்தில் மனுதர்மம் தயவு காருண்யம் நீதி நியாயம் எதுவும்
நடக்காது. அரக்ககுணம் கொண்ட மன்னனைப் பெற்ற மக்களும் அதைத்தானே பின்
பற்றுவார்கள். அதனால் அவர்கள் அரக்க குலம் என்றழைக்கப் பெற்றார்கள். இராவணன்
பிறப்பால் தமிழன் ஆயினும் அவன் அரக்க குணத்தை தன்னுடைய தங்கையின்
துர்போதனையால் தேடிப் பெற்றுக்கொண்டான். பகுத்தறியாக் கூட்டம் இராவணனைத்
தமிழன் என்று மார்தட்டிக் கொள்ளும் பைத்தியங்கள். தமிழர்கள் எல்லாரும் பிறன்மனைக்
கள்வர்களா? என்ன ? எல்லாத் தமிழர்களையும் மற்றவர்கள் அரக்கத் தமிழர் என்று நம்பும்படி
பேசிப் பேசி கெடுத்தவர்கள் எல்லாம் இன்று பெரியவர்களாகிப் போனார்கள்.
குணங்களைக் குறிப்பிடும் போது அன்றையப் பெரியவர்கள் மூன்று குணமென்பார்கள்.
அவை முறையே 1. சத்வம். ( எட்டு குணம் ) . 3.இராசதம். (எட்டு குணம்) 3 தாமசம்
( பதினோரு குணம்) ஆகும்
சத்வம் :-முறையே எட்டும்குணங்கள் ஞானம் அருள் தவம் பொறை வாய்மை மேன்மை
மோனம் மற்றும் ஐம்பொறி அடக்கம் ஆகும்
இராசதம் குணங்கள் முறையே எட்டும் :- மனவூக்கம் ஞானம் வீரம் தவம் கருமம் தானம்
கல்வி கேள்வி ஆகும்
தாமஸ குணங்கள் முறையே பதினொன்று:-
பேருண்டி பெருந்துயில் சோம்பல் நீதிவழுவல் ஒழுக்கம்வழுவல் வஞ்சம் மறதி பொய்
கோபம் காமம் கொலையும் ஆகும்.
முதலில் சத்வ குணம் படைத்த இராவணன் கைலை பரமனிடம் தவமிரு ந்துப் பார்வதியை
கேட்டதும் அவன் இராசதம் குணம் படைத்தவனாகிப் போனான். பிறகு சூர்ப்பனகை பேச்சைக்
கேட்டு சீதையைத் தூக்கி வந்ததும் அவனை தாமஸ குணங்கள் பதினொண்டும் பற்றிக்
கொண்டு நல்ல குணங்கள் அடியோடு தொலைந்து போனது. அவன் அரக்க குணம் கொண்
டவனாய் மாறிப்போனான்.
இந்து மதமே (அறுவகை சமயங்கள்:) உலகத்தின் அறிவார்ந்த மதமாகும். பாரத தேசம்
முழுமை யிலும் ஆங்காங்கே வற்றா ஜீவநதிகளும் நீர்வீழ்ச்சி களும் ,சிறு நதிகளும்
சிற்றோடைகளும், பள்ளத்தாக்ககுகளும், மண் வளமிகுந்தும் கனிமங்கள் நிறைந்தும்.
இருந்தது.
எங்கு மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ வகையாய் அமைகிறதோ அங்கு உழைப்பு
அதிகமாக வீணாகாமல் நேரம் மிச்சப் படுகிறது. அங்கு அரசர்கள் முதல் செல்வந்தர்கள்
பலரும் தங்கள் மக்களுக்கு ஊக்கம் தந்து பவற்றையும் கண்டு பிடிக்க செய்தார்கள்.
அதன் விளைவே கல்வி விஞ்சான வளர்ச்சியும் வந்தது .அதைத்தான் நாகரீகம் என்றார்கள்.
அப்படி நாகரீகம் வளர்ந்த இடங்கள் கிரேக்கம் எகிப்து அசீரியா மெசபட்டோமியா சுமேரியா
சிந்து வெளி நாகரீகங்கள். நேரம் மிச்சமாக இருந்த படியால் கல்வி வீரம் பக்தி ஞானம்:
வானவியல் விஞ்சானம் கட்டடக் கலை சிற்பங்கள் கோயிகள் ஓவியக் கலைகள் எல்லாம்
வளர்த்தார்கள்.
இந்தியாவில் ஹரப்பா மொக்சதாரோ (ஒரிஜினல் பஞ்சாபில் (தற்போது பாக்கிஸ்தான்)
எனுமிடத்தில் சிந்து ரவி நதிகள் ஒடுமிடத்தில் அகழ்வாராய்ச்சி செய்த வெள்ளையர் அந்த
இடத்தில் பழைய நாகரீகம் ஒன்று இருந்ததைக் கண்டுப பிடித்தார்கள்.
நாகரீகத்தை குழிதோண்டி கண்டுபிடிக்க வந்த வெள்ளையர்கள் சிந்துவெளியில்
கிடைத்த எழுத்துக்களில் சில எழுத்துக்கள் மத்தியப் பிரதேசம் அஸ்ஸாம் மணிப்பூர்
மற்றும் தென்னிந்திய எழுத்துக்கள் போலிருக்கிறது என்று சொன்னான். மேலும் தமிழ்
எழுத்துக்கள் தென்னிந்திய மொழியில் எல்லாவற்றிலும் சிலசில எழுத்துக்கள் ஒத்தவாறு
இருக்கிறது என்றார்கள். இந்த நாகரீகம் இமாச்சலப் பிரதேச அடிவாரத்தில் (சிந்துவெளி)
அமைந்துள்ளது. சிந்து நாகரீகம் இருந்த இடத்திற்கும் பாண்டி நாட்டுக்கும் சுமார் ,1200
மைல்கள் இடவெளியுள்ளது.. ஆனால் கிடைத்த நாணயத்தில் சில எழுத்துக்கள்
மணிப்பூர் ஆப்கானிஸ்தான் மத்திய பிரதேத்திலும் தென்னிந்தியாவிலும் ஒத்து
இருப்பதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். அந்த சமயம் வடக்கு பிராமினர்களை
உத்ரா பிராமினர் என்றும் தெற்கு பிராமனகளை திராவிட பிராமினர் என்று அவகளுக்குள்
அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. தென்னிந்தியத் தமிழ் எழுத்துக்கள்
சிந்துவில் காணப்பட்டதால் அதற்கு திராவிட நாகரீகம் என்று ஒரு யூகத்தின் பேரில்
திராவிடர் நாகரீகம் என்று பெயரிட்டு விட்டார்கள்.
பண்டை கால ஆரியன் பற்றிய சரித்திரத்தை இந்த வெள்ளையர்கள்தான் எழுதி இருக்கிறார்
கள். அது பெரிய கதை இங்கு விவரிக்க நீளும். இருப்பினும் வேதத்தில் சில குறிப்புகளை
வைத்தும் சமகிருத மொழி மற்ற மொழிகளை எப்படி ஒத்துப் போகிறது என்பதைக் குறித்தும்
விளக்கியுள்ளார் மாதா பிதா பிரதா போன்ற பல வார்த்தைகளும் ஜெர்மன் ரஷ்யா
ஸ்கேண்டினவியா போன்ற மொழிகளோடு ஒத்துப்போவதால் ஆரியர் அங்கிருந்து ஆடு மாடு
களை மெய்த்துக்கொண்டே இந்தியா வந்தவர்கள் என்கிறார்கள். கிருத்திகா மேலும் பல
நட்சத்திரங்கள் பற்றி வேதங்களில் குறிப்பிட்டது பற்றி எடுத்துக்காட்டி நட்சத்திர நகர்வை
வைத்து இத்தனை ஆயிரம் ஆண்டுக்கு முன் ஆரியர்கள் இந்தியாவிற்கு கைபர் போலன்
கணவாய் வழியாக வந்தார்கள் என்கிறது வெள்ளையன் எழுதிய சரித்திரம்.
அதே வெள்ளையர்கள் தான் வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் உப நிஷதுக்களை
எல்லாம் பிராமணர்கள் தான் எழுதினார்கள் என்கிறார்கள். 5000 மைலை ஆடு மாடு
மேய்த்துக் கொண்டு இந்தியா வந்த்போது சித்துவெளியில் மக்கள் நாகரீக நகரை
நிர்மாணித்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆடு மாடு மேய்த்தவன் எப்படி வேதம் விஞ்சனம்
அறிவியல் கணிதம் மருத்துவம் புராண இதிகாச நூல்கள் எழுதியிருக்க முடியும்
வெள்ளையன் அதிகாரத்தில் இருந்ததால் அவன் எழுதியதே சரித்திரம் என்றார்கள்.
காரணம் அந்நியர் படையெடுப்பால் இந்திய சரித்திரங்கள் அழிக்கப் பட்டுவிட்டது.
இப்போது வெள்ளையன் எழ்தியதே சரிதிரமானது.
தற்போதும் நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கிய நூல்கள் தொல்காப்பியம் குறள்காலத்தி
லிருந்து இருக்கிறது. அவற்றில் ஒன்றில் கூட திராவிட என்ற சொல்லை பார்க்க முடியவில்லை.
தமிழன் தன்னை சேரன் சோழன் பாண்டியன் என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அராபிய நூல் குறிப்பும் கிரேக்கக் குறிப்பும் தமிழரை முப்படை நாடு என்றுதான்
குறித்துள்ள தேத் தவிற திராவிட நாடு என்று குறிக்க வில்லை.
1860 க்குப் பிறகு பிறந்த வனெல்லாமே வெள்ளையன் கால்டு வெல் எழுதிய இந்திய
சரித்திரத்தைதான் படித்தார்கள். அதனால்தான் தாகூர் திராவிட உட்கல பங்கா என்றான்.
இலங்கை மனோன்மணி சுந்தரம் பிள்ளை திராவிட நல் திருநாடு என்றான்.இவர்கள்
எல்லோரும் பஞ்சாப் எங்கே இருக்கிறது தமிழ் நாடு எங்கே இருக்கிறது. என்று சிந்திக்க
வில்லை . படித்தை பரிட்சையில் எழுதியதைத்தான் ஒப்பித்தார்கள். திராவிடன் பெயரை
சிந்து மக்களுக்கு வைக்க இ்வனோ அந்த திராவிடன் நான் என்கிறான். பிற்காலத்தில்
இந்த திராவிடக் கழகத்தார் அறிந்தும் அறியாதவர் போல இருந்துவிட்டார். காரணம்
இதைப்போல ஒரு அமைப்பை அவர்கள் மீண்டும் அமைக்க முடியாதல்லவா?. அதுதான்
காரணம்.
நமது இந்துமத மென்பது தொன்று தொட்டு இந்த பாரத தேசத்தில் இருந்து வருகிறது.
இந்து என்ற பெயர் நமக்கு முன்பே இருந்ததா அல்லது வெள்ளையன் வைத்த பெயரா.
அல்லது கிரேக்கரும் ரோமானியர்களும் வைத்த பெயரா என்பது பற்றிய பிரச்சனை
நமக்குத் தேவையில்லை. இந்து என்ற பெயரைப் பற்றி இந்தியாவின் முப்பதுக்கும்
மேற்பட்ட மாகாணங்களில் யாரும் பேசுவதில்லை.
தமிழர்களில் உழைப்பவர் மிகப் பலர். இந்தப் பலரும் அன்று சிவநெறியாளர்கள்..
இவர்கள் சிவனைத்தவிற திருமாலையும் கணபதியையும் முருகனையும் துர்கையையும்
வழிபடும் பிரிவுகளாக இருந்தது. இருப்பினும் மற்றவர்கள் அடுத்த நான்கு கடவுளர்களைத்
தொழுவதில் அவர்களுக்குப் பிரச்சனை இருந்ததில்லை. காலையில் எழுந்ததும் சூரிய
நமஸ்காரம் செய்வதில் அவர்கள் தவறியதில்லை.. இந்த ஆறு வகை பக்தியே அறுவகை
சமயங்கள் என்றும் அவை நம்மிடையே இருந்ததை அனைத்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் ரிஷி
முனிவர்களும் ரிஷிகளும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
வெகுகாலத்திற்கு முன்பே பல ரிஷிகளும் முனிவர்களும் யோகிகளும் சித்தர்களும்
பரம்பொருளான ஈசனைப் பற்றி அறிந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் ஈசனை பரம்பொருள் அருவமான்வர்
என்றும் கண்ணில் பார்த்து இன்னதென்று சொல்லமுடியாத அருவமானது என்றும் அவர்
அங்கிங்கு என்று எண்ணாதபடி எங்கும் நீக்கமற நிற்கும் பரம்பொருள் என்றனர். அந்த
அருவமான ஈசனே என்று விளக்குவது தான் சிதம்பர இரகசியம். உண்மையில் கடவுள்
உருவமில்லா ஈசன் என்று உலகிற்கு சொன்னவர்கள் இந்த ரிஷி முனி சித்தர்களே.
இந்த ஈசன் என்னும் மாபெரும் பரம்பொருள் நாத விந்துக்களால் ஆனது என்று கண்டுபிடித்து
உலகிற்கு அறிவித்தவர்களும் இதே ரிஷி முனி சித்துக்களே.. இந்த ஆத்மா உருபெற அல்லது
வடிவு பெற்றிட அதை நாம் ஆண் என்கிறோம் பெண் என்கிறோம் அல்லது அலி என்கிறோம்.
இந்த பிரபஞ்சத்தின் அண்டசாரா சரங்கள் எல்லாமும் விந்து நாதங்களினால் ஆனதே.
பரம்பொருளானதிலும் ஒன்றுபட்ட விந்து நாத கலா எனும் அகர உகர மகரங்கள் என்ற மூன்று
அம்சங்கள் அடங்கியுள்ளது என்றும் விளக்கி யுள்ளார்கள்.
ரிஷி முனி சித்துக்கள் எல்லாம் பரம்பொருளின் விந்துவை சிவ விந்து என்றும் பரம்பொருளின்
ஐக்கியகியமாயுள்ள நாதத்தை சக்தி என்றழைத்தனர். இந்த இரண்டும் கலந்த சக்தி
அர்த்த நாரீஸ்வராம். ஆண் என்றும் பெண் என்றும் அத்த நாரீஸ்வர் என்றும் பரம்பொருளை ப்
பிரித்துப் பார்க்க முற்பட்டபோது ஆண் மற்றும் பெண் சேந்துள்ளதே பரம்பொருள் என்ன என்பதை
கற்றறிந்த மக்களும் தெரிந்து கொண்டனர். பாமரர் இன்னும் தெரிந்து கொள்ள ஆவலின்றி
ஏமாற்றுப் பேர்வழிகளின் பிடியில் அகப்பட்டு சிரித்துக் கொண்டிரு க்கிறார்கள் பரம்பொருள்
ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒரேக் கலவை என்பதை மக்கள்
எளிதில் புரிந்து கொள்ள ஆண்பெண் குறிகளை இணைத்து லிங்கம் என்று சொல்லி
அதை அருவ உருவ வழிபாடென்றனர். இருகுறிகள் இணைந்திருப்பினும் அதை லிங்கம்
என்றே அழைத்தனர். (அப்படி அழைப்பது ஆணாதிக்கத்தைக் குறிக்கிறது அதையும் தவறு
என்று பகுத்தறிவு வாதிகள் சண்டையிடக்கூடாது ) .கடவுள் உருவமில்லா பொருளாய்
இந்தியர்கள் நினைத்திருந்தால் இந்நேரம் பரம்பொருளான ஈஸ்வர சக்தியை மறந்திருப்பர்.
ஆண் கடவுளர் பெண் கடவுளர் என்று நினைத்து இந்தியர் அதை உருவமாய் நினைத்து
தனித்தனி சிலைகள் அமைத்து வழிபட்டனர். உருவத்தை மனதில் பதிய விட்டதால்
புலித்தோல் அருகசையோன் முக்கண்ணன் திரிசூலதாரி பிறை சூடி சடையன் என்றெல்லாம்
பலவாறாக உருவங்களைக் கொண்டு மக்கள் சிவனை மறக்காமல் இருக்கின்றார்கள்.
இல்லை என்றால் இந்துக்கள் அறுவகை சமயத்தையும் மறந்து அனைவரும் சமணர் பௌத்தர்
களாக அன்றே மாறி யிருப்பார்கள். அரசர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் பலபல
ஊர்களிலும் அறுவகைக் கடவுளர்க்கும் கோயில் கட்டி விக்கிரகங்களை பிரதிஷ்டை
செய்தார்கள்
பெரியக்கோயில்களைக்கட்டி குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகம் செய்து புதுப்பித்து வந்தார்கள்.
வழிபாட்டிற்காக பெரும் சொத்தையும் நிலத்தையும்யும் கோயிலுக் கென ஒதுக்கி
வைத்திருந்தார்கள். ( ஆனால் தற்கால அரசியல் தலைவரெல்லாம்கோயில் சொத்தை
தங்கள் பெயருக்கு அல்லது வேறு ஆளுக்குக்கொடுத்து பதிலாக வேறு
இடத்தில் சொத்து வாங்கிக் கொள்கிறார்கள்.)
ரிஷி முனி சித்தர்களே வழி வகைகள் உண்டாக்கிட மக்கள் கோயில்கள் அமைத்து
அறுவகை சாதியினரும் வழிபட்டு வந்தனர். இவர்கள் தான் சாதியினர். மற்ற குலத்தொழில்
செய்பவர்கள் குலத்தார் என்றே அழைத்திடல்வேண்டும்
பாரதியார் கடவுள் சாதி அறுவகை சாதியைச் குறிப்பிடுவதைகவனியுங்கள்.
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடு வோம்தெய்வ
சாதி படைக்கவும் செய்திடுவோம்
ஆரியன் ஸ்கேண்டி நேவியனோ ரஷியனோ இல்லை அவன் இங்குதான் பிறந்தான்
கற்றான் வளர்ந்தான். அவன் ஆடு மேய்த்ததிலிலை ஆட்டைத் தின்னவில்லை சாராயம்
குடிக்கவில்லை. சோமபானம் என்பது சந்திரனின் விந்துநீர் அம்மாவாசையில் சித்தர்கள்
தெளிந்தெடுக்கும் நீரது என்று திருவள்ளுவர் காய கற்பங்கள் 300 எனும் நூலில்
குறிப்பிட்டுள்ளார்
இந்த ஆறுவகை ப் பிரிவினரும் அவரவர் கடவுளர்கள் தொழுவது ஏன் என்று சொல்ல ஒரு
காரணம் வைத்திருப்பர். அந்தந்த கடவுளர் களை வழிபட ஏதாவது ஒரு காரணத்தை சொல்லுவார்கள்.
அவர்கள் கடவுளர்களை வணங்குவதற்கு தனித்தனி இயமம் நியமம் நிஷ்டைகளை
கடை பிடிப்பர்
(தொடரும்)