பாரதிமுன் கறுப்பர் இருப்பின்

பாரதிமுன் கறுப்பர் இருப்பின்

வேறுபட்ட திராவிடன்-- என்றாய்நீ
வீரத்தமிழ் மரபுகற்காய் போ போ
நூல்தமிழைப் பலர்போற்ற -- கந்தசஷ்டி
நூலைத்தூற் றியபாவியே போ. போ

மாறுபட்ட திராவிடர் வாதுநூறு
வாய்கிழிய பேசுவாய் போ. போ
நீதிநூறு சொல்லுநூல் பலவிருந்தும்
நீதிநூலை படித்ததில்லை. போ. போ

தீமையஞ்சா செய்குவாய் -- உமக்குமே
தீமைவந்தால் ஒடுவாய். போ போ
ஆமைபோல நுழைந்தனை. நாட்டிலே
ஆளில்லா வேளையிலே. போ. போ

மாறுபட்ட திராவிடன் --- உன்னையும்
வேறுபட்டு விரட்டுவார் போ. போ
செருப்பாய் உழைப்பேன். என்றநீ
செருப்படி பெறுவதுறுதி. போ போ

எழுதியவர் : பழனிராஜன் (21-Jul-20, 3:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 98

மேலே