வேதமும் வாழ்க்கையும் - தமிழில் வேதங்கள், அறிவோம் , வாழ்வோம்
எள்ளுக்குள் எண்ணை
முதலில் கண்டவர் யாரோ
காணாமல் கிடப்பதை
கண்டுகொண்டால் நன்மை
காணாத கடவுளைக் -கண்டோர்
மாமுனிவர் கண்டு வாழ வழிமுறைகள்
கடவுள் சொல்ல இவர்கள் காதால் கேட்டு
வழி வழியாய் சீடருக்கும் பயில்விப்ப
வாக்கு எழுத்தாய் மாறிய நாளில்
இவை எழுதப் பட்டு நமக்கு அளிக்கப்பட்ட
வரப்பிரசாதம் அவையே நாம் போற்றும் வேதங்கள்
ரிக்,யஜுர், சம, அதர்வண வேதங்கள்
வடமொழியில் இவை வேதங்கள்
நம் தமிழில் மறைகள் இவை
இறைவனின் அங்கங்கள்...நமக்கு
'திவ்ய பிரபந்தங்கள்' ரூபத்தில் இதை
அருளித்தந்தார் 'நம்மாழவாராம்'
'வேதம் தமிழ் செய்த மாறன்'- அவையே
முறையே , 'திருவிருத்தம்,திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
என்கின்ற தித்திக்கும் தீந்தமிழ் பாக்கள்
வேதங்களை தமிழில் படிப்போம்
சாரங்களை கிரஹிப்போம் இறைவனை
நாடுவோம் மனிதப்பிறவியின் அர்த்தம் புரிந்து
கொஞ்சம் வாழப் பார்ப்போம்
வேதங்கள் அஞானத்தைப் போக்கும் விஞானம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தாதார்
இறைவன் அடிசேரா தார் '
,