வாயை மூடி பேசு

காய்கறி வாங்க
கடைக்கு சென்றால்
கொரோனா கட்டுப்பாடு...! !

சமூக இடைவெளி....
முக கவசம் தேவை...
மீறினால் தண்டனை..! !

"டாஸ் மார்க்"
கடைக்கு செல்ல
எந்த கட்டுப்பாடும்
தேவையில்லை...! !

அதுவும் சரிதான்...
நிதானம் தவற போகும்
மனிதர்களுக்கு...
கட்டுப்பாடு ஏதற்கு...?

ஆனால்.....
நாம்
காந்தி தேசத்தின்
மைந்தர்கள்...! !
வாயை மூடி தான்
பேசவேண்டும்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jul-20, 7:01 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaayai moodi pesu
பார்வை : 126

மேலே