இசைஞானி அவன் யாருக்கு பாடுகிறான் இன்னும்

காது கேட்காது
ஆனால் அவன் பாட்டு
அது அசாத்தியதில் அசாத்தியம்
அவன் தன்னை மறந்து பாட
அதைக்கேட்ட குயிலும் பாட மறந்து
இவன் பாட்டில் ஐக்கியம்
இவனுக்கு காது கேட்காது
பின் இவன் பாடுவது எதற்கு யாருக்கு
இவன் பிறவி செவிடன் அல்லன்
ஒரு விஷ காய்ச்சல் பாதிப்பில்
கேட்பதை மெல்ல மெல்ல இழந்து
முடிவில் செவிடானான் .....
அவன் செவிடு என்று அறிந்து
அவனை விட்டு விலகினால் அவள்
அவன் 'அன்பு காதலி;
கேட்கும் உன்னத நிலையில்
பாடும் உச்ச நிலையில்
அவள் அவனை நாடினாள்
காதலித்தாள்.... நீயே என் உயிர் என்றாள்
அவன் ஈட்டிய பெரும் தனத்தை தனதாக்கிக்கொண்டாள்
அவன் செவிடன்..... அவனை விட்டுவிட்டு போய்விட்டாள்

ஏமாற்றத்தின் உச்சத்தில் அவன்
அவன் வேண்டுவதெல்லாம் அவளை மட்டுமே
அவளை மன்னித்து ஏற்கவும் தயார்
அதற்காகவே இப்படி அசுர சாதனை
உலகை மயக்க பாடுகிறான்....
அவள் இதைக்கேட்டு... மீண்டும்
இவனோடு சேர்ந்திடுவாளா ....????

அவன் பாடிக்கொண்டிருக்கிறான்
தனக்காக அல்ல ...பிறருக்காக
பிறர் துன்பம் துடைக்க
அவன் செவிடன்
அவன் துன்பம் இதய வலி
யார் கேட்பார்,,, யார் துடைப்பார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jul-20, 2:27 pm)
பார்வை : 1676

சிறந்த கவிதைகள்

மேலே