காதல்

மலரோடு சேர்ந்து உறவாட வந்த
தென்றல் மலரைக்காணாது அங்கு
மலர்விழியாளைக் கண்டது அவள்
மலர்விழிகளில் கண்ணீர் சிந்த வந்த
தென்றல் ஏன் கண்மணி கண்ணீர்
சிந்துகின்றாய் என்று கேட்க கன்னி
விக்கி விக்கி சொன்னாள் 'தென்றலே
இன்று எனது பிறந்த நாள் என்னவன்
என்னைக்காண வருவேன் என்று வாக்களித்து
வாராதிருக்க இரவின் நடுநிசியும் போய்
சேவலும் கூவிட எங்கோ சோலைக்குயில்
இசைக்கூவலும் கேட்குதே இவன் இன்னும்
வாராது இருக்க என் நெஞ்சம் சிதையுதே
தென்றலே என் செய்வேன் நான் நீயே சொல்லு
என்றால்..' தென்ற சொல்லியது ' மலர்விழியே
விட்டுவிடு உன் கவலை மாலை மயங்கும்முன்
உன் காதலனை என்னுடன் அழைத்து வருவேன் நான்
உன்னோடு சேர்த்துவைக்க என்று சொல்லி
போனது தென்றல் ' தூதுவனாக

மாலையும் வந்தது இரவும் மெல்ல வந்திட
திங்களும் வந்தது அதே இடத்தில நேற்று
வந்த அதே இடத்தில மலர்ச்சோலையில்
கீதம் இசைத்து தென்றல் வந்தது முன்னே
அதன் பின்னே வந்தான் அவன்
அவள் காதலன் ஊடலை மறந்து
அவளோடு உறவாட அவளை ஏற்றுக்கொள்ள

தென்றல் சேர்த்துவைத்த காதலர் இவர்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jul-20, 2:37 pm)
Tanglish : kaadhal
பார்வை : 329

மேலே