நிறம்

நிறம்

கறுப்பர்கள் தீண்டத் தகாதர்வர்களா
வெளுத்தவர்கள் உனக்கு வேண்டியவர்களா

வெளுத்தவர்கள் சிறைக்குச்சென்றதில்லையா
கருத்தவர்கள் பெருமை பெற்றதில்லையா

கழுத்தில் மிதிக்கும் வெள்ளையனே
கொழுப்பா உனக்குக் கொடூரனே

நெல்சன் மண்டேலாவின் உயரம் தெரியுமா
வெள்ளையன் பாராட்டிய விசயம் தெரியுமா

இரத்தத்தில் ஏதடா கருப்பு வெள்ளை
பித்தத்தில் உனக்கு பார்வை இல்லை

கருப்பு இல்லாமல் வெளிச்சம் ஏதடா
வெறுப்பு இல்லாமல் வாழப் பழகடா

கண்கள் இருந்தும் நீயும் குருடடா
எங்கள் கறுப்பினம் என்றும் மேலடா

எழுதியவர் : இளங்கதிர் (24-Jul-20, 2:35 am)
சேர்த்தது : இளங்கதிர்
Tanglish : niram
பார்வை : 50

மேலே