கண்ணீரில் பிரிவினை
ஓரு மனிதனின்
மௌன மொழி
கண்ணீர் தான்...! !
அந்த கண்ணீரிலும்
பிரிவினை...! !
ஆம்...
வலிக்கும்
கண்ணீர் என்றும் ...
வலிக்காத
கண்ணீர் என்றும்..! !
எல்லை மீறிய
சோகம் தரும்
கண்ணீர் வலிக்கும்..!
எல்லை மீறிய
மகிழ்ச்சி தரும்
கண்ணீர் வலிக்காது..! !
ஆனால்..
மனிதனுக்கு
முதலைக்கண்ணீர்
மட்டும் வேண்டாம்..! !
--கோவை சுபா