நல்லவை இவை இவை
கண்களைத் தந்தான் இறைவன்
வண்ண காட்சிகள் காண
நல்லதை நல்ல காட்சிகளை
காதுகள் தந்தான் நல்லதையே
கேட்க இன்னாததை ஒதுக்கி
நாவைத் தந்தான் இறைவன்
நல்லதையே சொல்ல இறைவன்
நாமத்தை மறவாது ஓதிட
பிறர் மனம் நோவாது பேசிட
இவையெல்லாம் அறிந்தும் நாமோ
அறியாததுபோல் வாழ்ந்தால் எப்படி
இறையடி காணுதல் முடியும்
நம்முள் சத் குணங்கள்
பெறுக உள்ளொலிபெருகும்
நம்முள் நாமே 'அவனைக்கண்டிட'