இனிதே வாழ்ந்திடலாம் நாம்
பேச தெரியாது அலைந்த மனிதருக்கு
பேசிடவே மொழிகள் தந்தான் இறைவன்
இருக்கும் இடம் சூழலுக்கு ஏற்ப மொழியில்
வேற்றுமை வைத்தான் மொழிகள் பலவாயின
பலமொழிகள் பலவித தோற்றத்தில் இறைவன்
இப்படித்தான் ஒன்றே ஆயினும் 'அவன்'
தன்னை 'பலவாக' காட்சி தருகின்றான்
அவரவர் மொழிக்கும் இடத்திற்கும் ஏற்ற
இறைவனை அறிந்து போற்றுதும் ஒருபோதும்
மற்ற மொழி இறைவனைப் பழித்திடாது
இனிதே வாழ்ந்திடலாம் வையம் உள்ளவரை