புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 33---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௩௩

321. நேற்று என்ற கண்ணாடியைப் பார்த்து
இன்று உன் பிம்பத்தை அழகுபடுத்திக் கொள்
நாளை நீயே அழகாகத் தெரிவாய்.

322. பழம் இருக்கும் இடத்தில் பறவைகளின் கூட்டம்
பணம் இருக்கும் இடத்தில் உறவுகளின் கூட்டம்
பட்டாசு என்ற துன்பத்தில் எல்லாம் ஓட்டம்.

323. வாசலில் தினமொரு கோலமென்றால் வாசல் அழகாய் இருக்கும்
வாழ்க்கையில் தினமொரு கோலமென்றால் வாழ்க்கை அழகின்றி இருக்கும்.

324. ஒரு பொருள் செயல்படும் வரை அவசியமாய் இருக்கும்
செயலற்று விட்டால் அலட்சியமாய்க் கிடக்கும்
மனிதனுக்கும் அதே நிலைதான்.

325. உலகத்தில் எதுவும் தானாக வருவதே இல்லை
அதற்கான விதை எங்கோ? விதைக்கப் பட்டிருக்கும்.

326. வாழ்வில் கெட்டதைச் செய்ய பயப்படு
நல்லதைச் செய்ய பயணப்படு.

327. நெருப்புக்குள் இருக்கும் போது தப்பிக்க நினைத்துச் செயல்படுவாய்
நெருப்பை விட்டு வெளியில் இருந்தால் அணைக்க நினைத்துச் செயல்படுவாய்
வாழ்வில் வரும் பிரச்சனைகளும் இதே தான்.

328. அழகான பிள்ளையை அடங்காத பிள்ளையாய் வளர்த்து விட்டால்
யாரிடமாவது தலைகுணிந்து நடக்க நேரிடும்.

329. நீ சுத்தமாக இருக்கவில்லை என்றால்
உன் உயிரைக் கிருமிகள் சுத்தமாகத் தின்றுவிடும்
விழித்துக்கொள், பிழைத்துக்கொள்.

330. ஒன்றைப் பெறுவது மட்டும் வாழ்க்கை அல்ல
கொடுத்தும் பழகு, அது உனக்கும் அழகு.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (24-Jul-20, 8:56 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 124

மேலே