மொழிச்சாமி
மொழிச்சாமி
பாரதம் என்பது என்நாடு இதிலே
பாஷைகள் மட்டும் பதினாறாம் பாரு
பாரத மக்களும் ஒன்றே குலமாம்
பாரும் அவர்க்கு ஈசனும் தெய்வமாம்
பலபல தெய்வம் சொல்லுவார் அதவர்க்கு
குலதெய்வம் குட்டி தேவதை களாம்சொல்லு
வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் சொல்வேன்
வேறெந்த ஆண்டவனும் எம்மொழி ஏற்கா
இறக்குமதி கடவுளை ஏற்கோம் நாமும்
இரந்துண் டாலும் இறைவனை மாற்றோம்
வேதனை எம்மை படுத்தாதீர்
அவரவர் கடவுளும் அவரவர் மொழியிலே