சிவலோகம்
என் லோகம் சிவலோகம்
மனம் தேடும் பரலோகம்
சொந்த லோகம் விட்டுப்புட்டு
எதற்கு இங்கு வந்தேன்னு தெரியலையே..!!
இவ்வுலக வாழ்க்கை போர்க்களம்
மனம் சந்திக்கும் பலப்போராட்டம்
இதில் இருந்து எப்படி மீண்டு
போவது என்று தெரியலையே...!!
சொந்த பந்தம் அங்கிருக்க,
சொர்க்கம் ஒன்று காத்திருக்க,
சொத்து சுகம் தேடி இங்கே வந்தேனோ??
தந்தை என சிவன் இருக்க
தாயுமாக அவன் இருக்க
எந்த உறவைத் தேடி
நானும் வந்தேனோ.. வந்தேனோ??
என் லோகம் சிவலோகம்
மனம் தேடும் பரலோகம்
சொந்த லோகம் விட்டுப்புட்டு
எதற்கு இங்கு வந்தேன்னு தெரியலையே..!!
சிவலோகதிலையே இருந்திருந்தால்
பிறவா வரம் பெற்றிருக்கும் ஜீவனிது..
இவ்வுலகத்தில் ஏன் வந்து பிறந்தேனோ?
இச்சையில் மூழ்கி தவித்தேனோ?
முன் ஜென்ம செய்த பாவமோ
புவிமீது வந்து விழுந்தேனோ?
இந்த நரகத்தில் இருந்து திரும்பிடுமா-
ஜீவன்,, திரும்ப வழியின்றி இங்கையே
திரிந்திடுமோ...திரிந்திடுமோ..??
என் லோகம் சிவலோகம்
மனம் தேடும் பரலோகம்
சொந்த லோகம் விட்டுப்புட்டு
எதற்கு இங்கு வந்தேன்னு தெரியலையே..?
அருளும், அமைதியும் அருவியாய் கொட்டிடும் அந்த சிவலோகதிலே.....!!
இன்பம்..துன்பம்..ஏதும் இன்றி
மனம் திளைத்திடும் அவன் அருகில் இருக்கையிலே..!
அப்பனை தொழுதிடும் மனதிலே
அற்ப எண்ணங்கள் வந்து முளைத்திட்டதோ?
அவன் பணி செய்து கிட்டக்க
நிணைக்கயிலே ஆசை வந்து குறுக்கிட்டதோ...?
அந்த விதியின் வசத்தால் இங்கு
வந்தேனா..?
திரும்பி அவன் அடி செல்ல
வழியின்றி தவித்தேனா??
என் லோகம் சிவலோகம்
மனம் தேடும் பரலோகம்
சொந்த லோகம் விட்டு புட்டு
எதற்கு இங்கு வந்தேன்னு தெரியலையே..??
நன்மை செய்கிறேன் என காட்டிக்கொள்ள வந்தேனா.....!?
நடிகன் ஆகி பெருமை
பட்டுக்கொள்ள வந்தேனா....!?
பெண்ணினம் பின் சென்று
பித்தனாகிட வந்தேனா....!?
இல்லை,
புகழிடம் சிக்கி கொள்ளவா??
தற்பெருமை அடித்துக் கொள்ளவா??
நீர் குமிழ் போன்ற இவ்வாழ்வை
ரசிக்கவா.... ரசிக்கவா...??!!
எதற்கு எதற்கு இங்கு வந்தேனோ??
என் ஐயனை தேடி தேடி நித்தம் மனம் அழுதேனோ...??
என் லோகம் சிவலோகம்
மனம் தேடும் பரலோகம்
சொந்த லோகம் விட்டு புட்டு
எதற்கு இங்கு வந்தேன்னு தெரியலையே??
அவன் திருவடி
சரணடந்திட
துடித்திடும்
என்றும்...என்றென்றும்...
ஜீவன்